Wednesday, August 14, 2024

திருநெல்வேலி மாவட்டம் சுற்றுலா இடங்கள்

 

1.அகஸ்தியா் அருவி   வழிகாட்டுதல்

திருநெல்வேலியிலிருந்து 42கி.மீ தொலைவில் பாபநாசம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அகஸ்தியர் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சிகள் முனிவரின் அகஸ்தியத்திற்கு முன் சிவன் மற்றும் பார்வதி தோன்றிய இடத்தில் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. பாபநாசம் என்பதன் பொருள் பாவங்களை நிவர்த்தி செய்வது என்பதாகும். இந்த அருவியில் இருந்து விழும் நீரில் மக்கள் குளித்தால் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடும் ஒரு முக்கிய யாத்ரீக மையமாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.


2.மணிமுத்தாறு அணை  வழிகாட்டுதல்

குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி அருவிக்கு கீழே 80அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம். பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்ணை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம். மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி ஓர் அழகு தான்.


3.மணிமுத்தாறு அருவி  வழிகாட்டுதல்

மணிமுத்தாறு அருவி மணிமுத்தாறு அணையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. மணிமுத்தாறு பெருக்கெடுத்து மணிமுத்தாறு அணையில் கலக்கின்ற இடத்தில் தான் இந்த மணிமுத்தாறு அருவி உள்ளது.

நமது குடும்பத்தோடு அல்லது நண்பர்களுடன் குளித்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இந்த மணிமுத்தாறு அருவி மிகவும் அருமையான இடமாக இருக்கும். இந்த மணிமுத்தாறு அருவியில் எல்லா காலகட்டத்திலும் தண்ணீர் இருந்து கொண்டேதான் இருக்கும். அதனால் நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த மணிமுத்தாறு அருவி உள்ளது.



4.மாஞ்சோலை  வழிகாட்டுதல்

இந்த மாஞ்சோலையே திருநெல்வேலியின் மூணாறு என்று கூறுவார்கள். நீங்கள் ஊட்டி மூணாறில் பார்த்திருக்கும் அனைத்து இயற்கை காட்சிகளுமே இந்த மாஞ்சோலையிலும் இருக்கும். அதனை விட கொஞ்சம் அதிகமாகவே இயற்கை எழிலுடன் இந்த மாஞ்சோலை காணப்படும்.

இந்த மாஞ்சோலைக்கு எப்படி செல்லவேண்டும் என்றால் மணிமுத்தாறு அருவியிலிருந்து மலைக்குமேல் செல்லும் பாதை வழியாகத்தான் இந்த மாஞ்சோலைக்கு செல்ல வேண்டும்.

மாஞ்சோலை ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றாலும் இங்கு அவ்வப்போது வனவிலங்குகள் வரும் என்பதாலும், இங்கு செல்வதற்கு வனத்துறையினர் நிறைய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.

மாஞ்சோலையில் எப்பொழுதும் குளிர்ச்சியான சூழலே நிலவும். மேலும் இங்கு ஏற்படும் காலநிலை மாற்றங்களை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதனால் நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த மாஞ்சோலை உள்ளது.



5.குற்றாலம்   வழிகாட்டுதல்

குற்றாலம் தான் திருநெல்வேலிக்கு மிகவும் பெருமை சேர்க்கும் இடமாக உள்ளது. மழைக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர்.

இந்த குற்றாலம் திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது. நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த குற்றாலம் உள்ளது.



6.பாபநாசம்    வழிகாட்டுதல்

பாபநாசம் மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் ஊராகும். இங்கு உள்ள பாபநாசநாதர் கோயில் பழமை வாய்ந்த திருக்கோவில் உள்ளது. மேலும் இந்த பாபநாசத்தில் சிறப்பு மிக்க ஒரு அணைக்கட்டும் உள்ளது. இந்த பாபநாசம் திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ தொலைவிலும் அம்பாசமுத்திரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் உள்ளது.

அதனால் நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த பாபநாசம் உள்ளது.



7.களக்காடு   வழிகாட்டுதல்

களக்காட்டில் பழமை வாய்ந்த ஒரு சிவன் கோவிலும், வனப்பகுதியில் தலையணை என்னும் தடுப்பு அணையும் உள்ளது. மேலும் இங்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகமும் உள்ளது.

இந்த களக்காடு திருநெல்வேலியிலிருந்து இருந்து 45 கி.மீ தொலைவிலும் நாங்குநேரியில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் உள்ளது.


8.நெல்லையப்பர் கோவில்       வழிகாட்டுதல்

நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி நகரின் உள்ளேயே அமைந்துள்ளது. இந்த கோவிலும் மிகவும் பெருமையும், பழமையும் வாய்ந்த கோவில் என்பதால் நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இந்த நெல்லையப்பர் கோவிலும் உள்ளது.




No comments:

Post a Comment

Featured Post

Melmaruvathur Adhiparasakthi: A Deep Dive into the Divine Mother’s Abode: History, Beliefs, Architecture, Spiritual Power, Festivals

Melmaruvathur Adhiparasakthi Temple    👉   Route map   Arulmigu Adhiparasakthi Siddhar Peetam is a Hindu temple in Melmaruvathur, approxim...

Youtube Channel Image
Your Channel Subscribe To watch more Blogging Tutorials
Subscribe