தென்காசி: குற்றாலத்தில் இருந்து வெறும் 36 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவின் தென்மலை உள்ளது. சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் என்று சொல்லும் அளவிற்கு இந்த இடத்தில் கண்ணுக்கு விருந்தளிக்க கூடிய வகையில் இயற்கையின் மொத்த அழகையும் பார்க்க முடியும். விடுமுறையில் சொந்த ஊர் சென்றவர்கள் குறைந்த செலவில் டூர் செல்ல விரும்பினால் இங்கு போகலாம்.. இந்த பகுதிக்கு எப்படி செல்வது உள்ளிட்ட போன்ற விவரங்களை பார்க்கலாம்.
விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள், தங்கள் ஊருக்கு அருகிலே இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு விசிட் அடிப்பது வழக்கம். ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது என்றால் பர்ஸ் வெயிட் ஆக இருக்கனுமே என நினைப்பார்கள்.. குறைந்த பட்ஜெட்டில் அருகில் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என நினைப்பார்கள்...
அப்படியான ஒரு ஸ்பாட் தான் கேரளவில் உள்ள தென்மலை. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் தென்மலை இருந்தாலும் தென் மாவட்ட மக்கள் சில மணி நேர பயணத்தில் செல்லும் தொலைவில் தான் இந்த இடம் உள்ளது. அதிலும் குற்றால அருவி இருக்கும் தென்காசி மாவட்டத்தினருக்கு சில நிமிடங்கள் தான்.. தென்காசியில் இருந்து கொல்லம் செல்லும் ரூட்டில் இந்த தென்மலை உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் இந்த டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு செங்கோட்டை - புனலூர் ரூட்டில் அரைமணி நேரத்தில் போய்விடலாம்.. நமது நாட்டில் தொடங்கப்பட்ட முதல் எகோ டூரிஸ்ட் ஸ்பாட் இதுவேயாகும். குற்றாலத்தில் இருந்து வெறும் 36 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது. செங்கோட்டையில் இருந்து ரயில் வழியாக செல்லலாம். செல்லும் வழியிலேயே கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கையின் மொத்த அழகும் கண்முன்னே கடந்து செல்லும்.
13 கண் மதகு பாலம், நீரூற்று, சிறிய ஓடைகள் என போகும் வழியே ஒரு டிரெக்கிங்க் போன உணர்வை பயணிகளுக்கு கிடைக்கும். மலைப்பகுதி என்றாலும் கூட பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் அச்சம் இன்றி செல்லக் கூடிய ஒரு ஸ்பாட் ஆக உள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து வருபவர்கள் என்றால் பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று இந்த இடங்களுக்கு எளிதாக செல்ல முடியும்.
தேன் +மலை = என்பதே தென்மலை என அழைக்கப்படுகிறது. இங்கு அதிக அளவில் தேன் உற்பத்தி நடைபெறுகிறது. தென்மலையில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் என்றால் செந்துருணி வனவிலங்கு சரணாலயம், பாலருவி நீர்வீழ்ச்சி,தொங்கு பாலம் உள்ளிட்ட இடங்கள் உள்ளன. பாலருவியில் 300 அடி உயரத்தில் இருந்து அருவி கொட்டும். பாலருவி அருகே சிறிய குளம் ஒன்று உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி உண்டு.
வண்ணத்து பூச்சி பூங்கா, படகு சவாரி என சுற்றுலா பயணிகள் விரும்பும் இடங்கள் இங்கு இருக்கின்றன. தொங்கு பாலத்தை பொறுத்தவரை 400 மீட்டர் நீளம் கொண்டதாகும். கல்லடா ஆற்றின் மேல் இந்த தொங்கு பாலம் அமைந்துள்ளது. அடர்ந்த வனத்திற்குள் டிரெக்கிங் செல்லும் அனுபவத்தை இந்த இடங்கள் கிடைக்கும். குற்றாலத்தில் இருந்து சரியாக 36 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தென்மலை உள்ளது. கார்கள், பேருந்து மூலமாகவும் செல்ல வசதியுள்ளது.
No comments:
Post a Comment